பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வாணியாறு அணையில் அதிமுக எம்எல்ஏ ஆய்வு
பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வாணியாறு அணையில் அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி ஆய்வு மேற்கொண்டார்.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வாணியாறு அணை நிரம்பி வருவதையடுத்து அ.தி.மு.க.,எம்.எல்.ஏ., கோவிந்தசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது தொடர் மழையின் காரணமாக அணை நிரம்பி வருவதால் கரையோரம் உள்ள மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான இடத்துக்கு செல்ல வேண்டும், தங்கள் உடமைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
தர்மபுரி மாவட்டத்திற்கு முதன் முதலாக முதலமைச்சராக வந்த ஸ்டாலின் மாவட்டத்திற்கு புதிதாக எந்த திட்டங்களையும் அறிவிக்கவில்லை. வத்தல்மலை நீண்ட நாள் கோரிக்கையான பஸ் வசதி திட்டத்தையும் அறிவிக்கவில்லை. ஒகேனக்கல் கூட்டு குடிநீா் திட்டம் சாியாக செயல்படவில்லை என குற்றம் சாட்டினார்.
இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் நல்லத் தம்பி, ஒன்றிய செயலாளர்கள் விஸ்வநாதன், முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் பெரியக்கண்ணு, முன்னாள் ஒன்றிய கழக செயலாளா் ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தமிழ்மணி சேகர்,சி.எம்.ஆர்.முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.