அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் 50 வது ஆண்டு தொடக்க விழா
தர்மபுரி மாவட்டம் கடத்தூரில் அதிமுக சார்பில் கொடியேற்று விழா;
தர்மபுரி மாவட்டம் கடத்தூரில் அ.தி.மு.க.தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் அ.தி.மு.க 50 வது ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது. இதில் அரசு மருத்துவமனை அருகில் அக்கட்சி கொடியை முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் ஆ. கோவிந்தசாமி, அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே. சம்பத்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு வேலூர் மண்டல செயலாளர் ஜனனி பி. சதீஷ் குமார், ஒன்றிய செயலாளர்கள் மதிவாணன், முருகன், என்.ஜி.எஸ். சிவப்பிரகாசம், நகர செயலாளர் சந்தோஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.