பொட்டாஷ் அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
பொட்டாஷ் அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம், கடத்தூரில் மக்கள் சிறப்பு குறைதீர் முகாம் நேற்று மாலை நடந்தது. இதில் வேளாண்துறை அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தேவையான உரம் கையிருப்பில் உள்ளது. மத்திய அரசு பொட்டாஷ் விலையை தற்போது உயர்த்தி உள்ளது. ஆனால் விவசாயிகளுக்கு பழைய விலையில் பொட்டாஸ் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
விவசாயிகள் போட்டாஸ் வாங்கும் பொழுது அதன் மீது உள்ள விலை 1040 ரூபாய் என இருக்கிறதா? என்பதைப் பார்த்து வாங்க வேண்டும். பொட்டாஷ் விலையை உயர்த்தி யாராவது விற்பனை செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.