ஏ.பள்ளிப்பட்டியில் டூவீலரில் மதுபானங்களை கடத்தியவர் கைது

ஏ.பள்ளிப்பட்டியில் கூடுதல் விலைக்கு விற்க பைக்கில் மதுபாட்டில்கள் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-12-07 04:45 GMT
பைல் படம்.

தர்மபுரி மாவட்டம், ஏ.பள்ளிப்பட்டி காவல் உதவி ஆய்வாளர் சிவப்பெருமாள் மற்றும் போலீசார் பாப்பிரெட்டிப்பட்டி-சேலம் ரோட்டில் அதிகாரப்பட்டி இரட்டை குண்டு என்ற இடத்தில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது டாஸ்மாக் மதுபாட்டில்களை கூடுதல் விற்பனை செய்ய சமத்துவபுரம் டாஸ்மாக் மது கடையில் இருந்து மதுபாட்டில்கள் வாங்கி வந்த புதுப்பட்டியை மாது,வயது 60, என்பவரை கைது செய்து 250 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News