பொம்மிடி அருகே ஆட்டுச் சந்தையில் ரூ.1.15 லட்சம் கள்ள நோட்டு பறிமுதல்

பொம்மிடி அருகே ஆட்டுச் சந்தையில் கள்ள நோட்டு கொடுத்து ஆடு வாங்கியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-01-14 03:06 GMT

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி வட சந்தையூர் பகுதியில் வியாழக் கிழமைகளில் வாரசந்தை கூடுவது வழக்கம். இதில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஆடு,மாடு உள்ளிட்டவைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று நடை பெற்ற ஆட்டுச் சந்தையில் பொம்மிடி அருகே உள்ள ரேகடஹள்ளி பகுதியை சேர்ந்த சின்னராஜ் மகன் சரவணன் (38)என்பவர் ,தனக்கு சொந்தமான நான்கு ஆடுகளை விற்பனைக்காக வட சந்தையூர் ஆட்டுச்சந்தை கொண்டு சென்றார்.

அங்கு ஆடுகள் வாங்குவதற்காக தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திருச்செந்தூர், ஊத்துப் பாளையம் முத்துமாலையம்மன்கோவில் தெரு பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் மாணிக்கம் (58), மாணிக்கம் மகன் சிவசங்கரநாதன் (23) ஆகியோர் ஆடுகள் வாங்குவதற்காக வந்த நிலையில் ,

ஆடு வைத்திருந்த சரவணனிடம் அங்கு வந்த மாணிக்கம் மற்றும் சிவசங்கரநாதன் இருவரும் அவர் வைத்திருந்த 4 ஆடுகளையும் ரூபாய் 15 ஆயிரத்துக்கு விலை பேசி அதற்கான பணத்தை கொடுத்துள்ளனர்.

அந்த பணத்தை வாங்கி எண்ணிய பொழுது சந்தேகத்திற்கு இடமாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளை அருகில் இருந்த அதேபகுதியை சேர்ந்த நகுலன் மகன் பெரியசாமி, மற்றும் ஆல புரம்சுகர் மில் அருகில் உள்ள பட்டவர்த்தி கிராமத்தைச் சேர்ந்த சடையன் மகன் ஆகியவர்களிடம் காட்டி இந்த ரூபாய் நோட்டுகள் நல்ல நோட்டுகளாக என கேட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர்களும் இந்த ரூபாய் நோட்டில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்ததை அடுத்து இதுகுறித்து மூன்று பேரும் பொம்மிடி போலீசில்புகார் தெரிவித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து  கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மாணிக்கம், மற்றும் சிவ சங்கரநாதன் ஆகியோரை பொம்மிடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News