+1 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது
கடத்தூரில் +1 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது.;
தமிழக அரசு வழங்கும் விலையில்லா சைக்கிள்கள் தற்பொழுது பிளஸ் 1 மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடத்தூர் பகுதியில் உள்ள கடத்தூர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, புட்டிரெட்டிபட்டி மேல்நிலைப் பள்ளி, தொங்கனூர் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் படிக்கும் பிளஸ் 1 மாணவர்கள் மாணவிகளுக்கு சுமார் 15 லட்சம் மதிப்பிலான 361 சைக்கிள்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் மாதன் அனைவரையும் வரவேற்றார். பாப்பிரெட்டிப்பட்டி எம் எல் ஏ. கோவிந்தசாமி கலந்துகொண்டு மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். பள்ளி ஆசிரியை ரமா நன்றி கூறினார்.