பாலக்கோடு மார்க்கெட்டில் தக்காளி விலை கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை
பாலக்கோடு மார்க்கெட்டில் இரு மாதங்களுக்கு பிறகு, படிப்படியாக குறைந்த தக்காளி விலை கிலோ 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டிற்கு, தினந்தோறும், 200டன் அளவிற்கு தக்காளி வரத்து உள்ளது. இச்சந்தையில் இருந்து தேனி, திண்டுக்கல், சேலம், ஈரோடு போன்ற வெளி மாவட்டங்களுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டிற்கு பாலக்கோடு சுற்று வட்டார விவசாயிகள் பெல்ரம்பட்டி, பொப்பிடி , சோமனஹள்ளி, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, பேளாரஹள்ளி, எலங்காளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சாகுபடி செய்த தக்காளிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
இப்பகுதியில் பருவமழை பொழிவினால் தக்காளி விளைச்சல் பாதித்து சந்தைக்கு வரும் தக்காளி வரத்து குறைந்தது. இதனால் அதன் விலை அதிகரித்து. தற்போது தக்காளி குறைந்து வருகிறது. முதல் ரகம் கிலோ 30 ரூபாய்க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர் .15 கிலோ கொண்ட ஒரு கூடை தக்காளி 450 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இன்னும் சில வாரங்களுக்கு பிறகு, மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.