பாலக்கோடு அருகே கள்ளகாதலியின் மகன் மீது துப்பாக்கியால் சுட்டவர் கைது
பாலக்கோடு அருகே கள்ளகாதலியின் மகன் மீது துப்பாக்கியால் சுட்டவர் ஒருமாத தேடுதலுக்கு பின் கைது செய்யப்பட்டார்;
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே தொட்டபடகாண்டஅள்ளி கிராமத்தை சேர்ந்த கட்டிடமேஸ்தி முருகன்.இவரது மனைவி சுசிலாவுக்கும் அதே ஊரை சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் விஜயகாந்த் (38) என்பவருக்கும் நீண்ட நாட்களாக கள்ளக் காதல் இருந்து வந்தது
இந்நிலையில் சுசிலாவின் மகன் தினேஷ்குமார்(21) கடந்த மாதம் 11ம் தேதி நள்ளிரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது, ஜன்னல் வழியாக மறைந்திருந்து சுசிலாவின் கள்ளக் காதலன் விஜயகாந்த் நாட்டு துப்பாக்கியில் சுட்டு விட்டு தப்பி சென்றார்.
இதில் தினேஷ்குமாருக்கு கால் மற்றும் வயிற்று பகுதியில் குண்டடி அடிப்பட்டு சேலம் அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார். துப்பாக்கிசூடு குறித்து மாரண்டஅள்ளி காவல்துறையினர் வழக்குப்பதிவு தேடி வந்தனர்.
ஒரு மாத தேடுதலுக்கு பின் விஜயகாந்த் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் விஜயகாந்தை கைது செய்து விசாரணை செய்ததில், விஜயகாந்த், கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்த கள்ளகாதலியின் மகன் தினேஷ்குமரை தீர்த்தக்கட்ட முடிவு செய்த கள்ளத்துப்பாக்கியில் சுட்டது தெரிய வந்தது. இதனையடுத்து விஜயகாந்தை போலீசார்சிறையில் அடைத்தனர்.