மாங்காய்க்கு உரிய விலை தரலாமே: பாலக்கோடு விவசாயிகள் எதிர்பார்ப்பு
பாலக்கோடு பகுதியில் விளையும் மாங்காய்களுக்கு உரிய விலை கிடைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
மாங்கனி என்றலே நினைவுக்கு வருவது சேலம் மாவட்டம்தான். சேலம் மாவட்டத்திற்கே மாங்கனிகளை விளைவித்து தருவது தருமபுரி மாவட்டத்தின் உள்ள பாலக்கோடு, பெல்ரம்பட்டி, மாரண்டஅள்ளி, ஜிட்டாண்டஅள்ளி, அண்ணாமலைஅள்ளி, அத்துரனஹள்ளி உள்ளிட்ட பகுதிகள்
மாவட்டத்தில் விளைவிக்கப்படும் மாம்பழங்கள் பாலக்கோடு, காரிமங்கலம், வெள்ளிச்சந்தை பகுதியில் உள்ள மொத்த விற்பனை மாங்காய் மண்டிகளுக்கும், மாம்பழக்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கும், விவசாயிகள் மாங்காயை விற்பனை செய்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக ஒரு சில தொழிற்சாலைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன.
தற்போது பெங்களூரா, அல்போன்சா, பீத்தா், நீளம், பங்கனபள்ளி. செந்துர, உள்ளிட்ட மாங்காய் வகைகள் டன் ஒன்று 8ஆயிரம் முதல் 9ஆயிரம் வரை விற்பனை செய்வதால் பெரும் நஷ்டம் அடைவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மாம்பழக்கூழ் தயாரிக்கும் நிறுவனங்கள் மிகவும் குறைந்த விலைக்கே மாங்காயை கொள்முதல் செய்வதால், அதன் தரத்திற்கு ஏற்றவிலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனையோடு கூறுகின்றனர்.
எனவே தமிழக அரசு உடனடியாக மாங்காய் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, டன் ஒன்றிக்கு சுமார் 25ஆயிரம் ரூபாய் விலை நிர்ணையம் செய்ய வேண்டும் என, விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.