ஊராட்சி மன்ற தலைவியை தாக்க முயற்சி அ.தி.மு.க. பிரமுகர் மீது வழக்கு
ஊராட்சி மன்ற தலைவியை தாக்க முயற்சி அ.தி.மு.க., பிரமுகர் மீது வழக்கு;
ஊராட்சி மன்ற தலைவியை தாக்க முயற்சி அ.தி.மு.க., பிரமுகர் மீது வழக்கு தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, காரிமங்கலம் அடுத்த கும்பாரஹள்ளி ஊராட்சி மன்ற தலைவி கவுரி, 37. இவர், கீழ்கொள்ளுப்பட்டியில் நேற்று முன்தினம் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணிகளுக்கு பூமி பூஜை போட சென்றார். அப்போது அங்கிருந்த, அ.தி.மு.க., முன்னாள் ஊராட்சி தலைவியின் கணவர் மாது, 51, என்பவர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை தாக்க முயன்றார்.
இதனால், மாதுவை கைது செய்ய வலியுறுத்தி, ஊராட்சி மன்ற தலைவி கவுரி தர்ணாவில் ஈடுபட்டார். காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்ய காலதாமதம் செய்தனர். ஊராட்சி மன்றதலைவி கவுரி மற்றும் தி.மு.க.,வினர் மாது மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யவில்லை என்றால், மீண்டும் போராட்டம் செய்வோம் என கூறியதையடுத்து, காரிமங்கலம் போலீசார் மாது மீது வழக்குப்பதிவு செய்தனர்.