விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய குழு கவுன்சிலர்கள் சாலை மறியல் போராட்டம்
விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடத்த அனுமதிக்கப்படாததால் கவுன்சிலர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் அ.தி.மு.க, பா.ம.க, தி.மு.க, தே.மு.தி.க, பி.ஜே.பி, உள்ளிட்ட 13 பேர் கொண்ட ஒன்றிய குழு உறுப்பினர்கள் கடந்த 21.12.2021 அன்று ஒன்றிய பெருந்தலைவர் செல்லதுரை மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.
அதன் தொடர்ச்சியாக இனறு திட்டமிட்ட படி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் நடத்த அலுவலகத்தில் அனுமதி மறுக்கப்பட்டதாலும், தேதி குறிப்பிடப்படாமல் கூட்ட தேதியை தள்ளி வைத்ததால் ஊராட்சி ஒன்றிய அலுவலரை கண்டித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது காவல் கூடுதல் கண்காணிப்பாளர் அங்கித் ஜெயின் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் சாலை மறியலை கைவிட்டு மீண்டும் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.