குடும்ப அட்டைதாரருக்கு பொங்கல் தொகுப்பு வழங்கினார் விருத்தாசலம் எம்.எல்.ஏ.
குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.;
சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார்.
தமிழக அரசு கூட்டுறவுத்துறை மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியை விருத்தாசலம் ஒன்றியம் நறுமணம் ஊராட்சியில் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.ஆர்.ராதாகிருஷ்ணன் கிராம குடும்ப அட்டைதாரருக்கு 21பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் தி.முக. ஒன்றிய செயலாளர் தி.வேல்முருகன்,வட்டார தலைவர் சாந்தகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.