விருத்தாசலம் டிரைவர் காலனியில் கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் டிரைவர் காலனியில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட டிரைவர் காலனியில் 16வது வார்டு தற்போது பெய்த கனமழையால் தெருக்களில் குப்பை பல நாட்களாக அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது. மேலும் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்பதால் குடியிருப்பு பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதி பொது மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் அதனை உடனே சரிசெய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.