விருத்தகிரீஸ்வரர் கோயிலில் ஐயப்ப பக்தர்கள் 50-ம் ஆண்டு லட்சார்ச்சனை
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் ஐயப்ப பக்தர்கள் ஐம்பதாம் ஆண்டு லட்சார்ச்சனை விழா நடத்தினர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள 3000 ஆண்டு பழமை வாய்ந்த விருத்தாம்பிகை-பாலாம்பிகை உடனுறை அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயிலில் ஐயப்ப பக்தர்களின் ஐம்பதாம் ஆண்டு லட்சார்ச்சனை விழா நடைபெற்றது.முன்னதாக மணிமுத்தாற்றில் இருந்து ஐயப்ப பக்தர்கள் கரகம் சோடித்து ஊர்வலமாக விருத்தகிரீஸ்வரர் கோவிலை வந்தடைந்தனர்.
பின்பு நூற்றுக்கால் மண்டபத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் ,ஐயப்பன், மஞ்சமாதா காட்சியளிக்க சிறப்பு அபிஷேக ஆராதனை நடை பெற்று 1008 சரணங்கள் கூறி லட்சார்ச்சனை விழாவில் ஐயப்ப பக்தர்கள் சரணம் பாடினர்,பிறகு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.
இவ்விழாவில் திரளான ஐயப்ப பக்தர்கள் மற்றும் ஓம் சக்தி பெண் பக்தர்கள் பங்கேற்று ஐயப்பனை வழிபட்டனர்.