விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் அருகில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு கடைகள் நீதிமன்ற உத்தரவின் படி அகற்றப்பட்டது.;
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் சுமார் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இக்கோவிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணி இந்து அறநிலைய துறை மாவட்ட உதவி ஆணையர் பரணிதரன் தலைமையில் நடைபெற்றது.
நீதிமன்றம் 12 கடைகளை அகற்ற கோரி உத்தரவு பிறப்பித்த நிலையில் இந்து அறநிலை துறை சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இதில் விருத்தாசலம் பழமலைநாதர் திருக்கோவில் செயல் அலுவலர் முத்துராஜா,செயல் அலுவலர் சங்கர்,செயல் அலுவலர் சரவணன்,கொளஞ்சியப்பர் கோவில் செயல் அலுவலர் மாலா,செயல் அலுவலர் முத்துலட்சுமி,செயல் அலுவலர்கள் ஜெயலட்சுமி, ஐயப்பன், ரமேஷ்பாபு,சிவக்குமார், ராஜ்குமார்,ஆய்வர்கள் சுபத்ரா,ஜெயசித்ரா,வசந்தன்,விருத்தாசலம் கோட்ட துணைக் கண்காணிப்பாளர் அன்கிட் ஜெயின்,காவல் ஆய்வாளர் விஜயரங்கன் உதவி ஆய்வாளர் கமல்ஹாசன்,விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியர் சிவக்குமார்,கிராம நிர்வாக அலுவலர் சுந்தரி,வருவாய் ஆய்வாளர் பழனிவேல்,மற்றும் கோயில் ஊழியர்கள் காவல்துறையினர் உதவியுடன் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால், சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.