விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை ஆடிப்பூர திருக்கல்யாணம்

விருத்தாசலத்தில் அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது;

Update: 2021-08-12 05:07 GMT

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் உடனுறை பாலாம்பிகை விருத்தாம்பிகை திருக்கோவிலில் ஆடிப்பூர திருக்கல்யாணம் வெகு விமர்சியாக நடைபெற்றது,

இதில் பெண் வீட்டாராக பொதுப்பணித்துறையினரும், மாப்பிள்ளை வீட்டாராக வருவாய் துறையினரும் இருந்து கோவிலுக்கு சீர்வரிசை பொருட்களை கொண்டு வரப்பட்டது.

அதிகாலை 4.30 மணி முதல் ஆறு மணி அளவில் அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் உடனுறை பாலாம்பிகை விருத்தாம்பிகை சுவாமிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பின்பு சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓத சாமிக்கு திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது, இதில் கொரோனா தொற்று காலம் என்பதால் குறைந்த அளவே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 

Tags:    

Similar News