விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

100 நாள் வேலை கேட்டுவிருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டுபோராட்டம் நடத்தினர்.

Update: 2021-09-29 06:38 GMT
நூறு நாள் திட்டத்தில் வேலை கேட்டு விருத்தாசலம் ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குப்பநத்தம் கிராமத்துக்கு உட்பட்ட தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் கடந்த நான்கு வருடங்களாக எந்த ஒரு வேலையும் வழங்கப்படாத நிலையில் ஊராட்சி மன்ற தலைவரின் ஆதரவாளர்களுக்கு மட்டும் 100 நாள் வேலை தருவதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தது.

பணித்தள பொறுப்பாளரை நீக்கவேண்டும், பொது மக்களுக்கு பாரபட்சம் இன்றி  100 நாள் வேலை தரவேண்டும், மேலும் அப்பகுதியில் குடிநீர் வசதி,சாலை வசதி,மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அப்பகுதி பொதுமக்கள் முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு  பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த அதிகாரிகள், காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

Tags:    

Similar News