விருத்தாசலத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்

விருத்தாசலத்தில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.;

Update: 2021-12-05 11:11 GMT

விருத்தாசலத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்  ஆலோசனைப்படி  விஜயின்  திரையுலக பயணத்தில் 29 ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு விருத்தாசலம் எம்.ஆர்.கே நகர், தீர்த்த மண்டபம் தெருவில்  விஜய் மக்கள் இயக்கம் சார்பில்,ஏழை -எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், விஜய் மக்கள் இயக்கத்தினர் பட்டாசு வெடித்து, அரிசி, காய்கறி,மளிகை பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கி நடிகர் விஜய்யின் 29ஆம் ஆண்டு துவக்க விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சிக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் நகர தலைவர் வாசு தலைமை தாங்கினார்..ரமேஷ்,பிரகாஷ்,சதீஷ்,சுறா தினேஷ்,சின்னதுரை,ஹரி,குண்டு தினேஷ்,பிரேம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கடலூர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் ராஜ்குமார்,கடலூர் மேற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் விஜய்,சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் ராஜசேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அரிசி காய்கறிகள் மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.நகர நிர்வாகி சுதாகர் நன்றி உரை கூறினார்.

Tags:    

Similar News