விருத்தாசலத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
விருத்தாசலத்தில் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.;
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தனியார் திருமண மண்டபத்தில் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனைப்படி,கடலூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வருகின்ற மாநகராட்சி,பேரூராட்சி,நகராட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார்.மேற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் விஜய் முன்னிலை வகித்தார்.
தென் மேற்கு மாவட்ட தொண்டரணி தலைவர் கண்ணதாசன், மேற்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ்,விருதாச்சலம் நகர தலைவர் வாசு,வடக்கு ஒன்றிய தலைவர் வினோத்,தெற்கு ஒன்றிய தலைவர் சிவா ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்தினர்.
மேற்கு மாவட்ட துணைத்தலைவர் பெயிண்டர் சக்திவேல்,நகர இளைஞரணி தலைவர் பாபு கணேஷ் ஆகியோர் நன்றியுரை நிகழ்த்தினர்.
மேலும் 4 சட்ட மன்ற தொகுதியான விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோயில்,நெய்வேலி ஆகிய பகுதிகளில் இருந்து மேற்கு மாவட்டத்தின் இளைஞரணி,தொண்டரணி,மாணவரணி விவசாயஅணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.