விருத்தாசலத்தில் விஜய் மக்கள் இயக்கம் : புதிய கிளை திறப்பு

விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் பொது மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கல்,புதிய கிளை, பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.;

Update: 2022-01-15 05:21 GMT

விருத்தாசலத்தில் நடந்த விஜய் மக்கள் இயக்க புதிய கிளை திறப்புவிழா.

விருத்தாசலத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் பொது மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கி, புதிய கிளை மற்றும் பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது.

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழிகாட்டுதல்படி, மேற்கு மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசாக கரும்பு, அரிசி, வெல்லம் உள்ளிட்ட பொருட்கள்  புதியதாக வழங்கப்பட்டன. விஜய் மக்கள் இயக்க புதிய  கிளை மற்றும் பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது.. இந்நிகழ்ச்சியில் விருதை நகர தொண்டரணி தலைவர் ரமேஷ் விழாவினை ஏற்பாடு செய்திருந்தார்.

வடமேற்கு மாவட்ட தொண்டரணி தலைவர் ஆனந்த்,மாவட்ட தொண்டரணி பொருளாளர் ராஜி ஆகியோர்  தலைமை தாங்கினர். கடலூர் மேற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் விஜய் முன்னிலை வகித்தார். கடலூர் மேற்கு மாவட்டதலைவர் ராஜசேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பெயர் பலகையை  திறந்து,கொடியேற்றி, பொதுமக்களுக்கு பொங்கல் பரிசினை வழங்கினார்.

Tags:    

Similar News