விருத்தாசலத்தில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு வி.சி.க. ஆர்ப்பாட்டம்
விருத்தாசலத்தில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த மங்கலம்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகரில் ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு, விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில் இருந்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் வரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பேரணியாக சென்றனர்.
பேரணியில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்கள் என பலர் கலந்துகொண்டு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இலவச மனைப்பட்டா கேட்டு கோஷமிட்டனர். பின்னர்,கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் அரங்கநாதனிடம் மனு அளித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தை கட்சியின் மங்கலம்பேட்டை நகர செயலாளர் அம்பேத்கர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணை செயலாளர் திராவிடமணி பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார்.
நகர துணை செயலாளர் தனகுமார்,விருத்தாசலம் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் தென்றல்,நகர செயலாளர் முருகன்,வடக்கு ஒன்றிய செயலாளர் கவியரசன்,தெற்கு ஒன்றிய நிர்வாகி அய்யாதுரை,வடக்கு ஒன்றிய பொருளாளர் எழில்வான்சிறப்பு,நகர நிர்வாகி தனசேகரன் உள்ளிட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் கலந்து கொண்டனர்.