உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி அரசு பள்ளிக்கு வர்ணம் பூசிய சிறுமி

விருத்தாசலத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி அரசு பள்ளி வகுப்பறைக்கு சிறுமி சஞ்சனா வர்ணம் பூசினார்.;

Update: 2021-12-03 11:07 GMT

விருத்தாசலத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி அரசு பள்ளி வகுப்பறையில் வர்ணம் தீட்டிய சிறுமிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தினசரி காய்கனி மார்க்கெட்டில் பணிபுரியும் மார்க்கெட் பிரபு- லட்சுமி தம்பதியினரின்  மூத்த மகள் சஞ்சனா. இவர் தனது அம்மா லட்சுமி படித்த அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர்  உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு வகுப்பறையை வர்ணம் பூசி பொன்மொழிகள் எழுதி புதுப்பித்து கொடுத்தார்.

இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியை தலைமையில் உதவி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள்,மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News