விருத்தாசலத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி
தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் எண்ணெய் வித்துக்கள் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.;
கம்மாபுரம் வட்டாரத்தில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் எண்ணெய் வித்துக்கள் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி கூட்டம் விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெற்றது.
வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுதமதி தலைமை தாங்கினார். வேளாண்மை அலுவலர் ரத்னா வரவேற்றார். மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார் எண்ணெய் வித்துக்கள் திட்டத்தின் முக்கியத்துவம் பற்றி சிறப்புரையாற்றினார்.
வேளாண் விஞ்ஞானிகள் நடராஜன், பாஸ்கர், பாரதிகுமார் ஆகியோர் மணிலா, எள், சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள், அட்மா அலுவலர்கள் செய்திருந்தனர்.