விருத்தாசலத்தில் கடந்தை திருமுறை கழகத்தின் 52 -வது ஆண்டுவிழா
விருத்தாசலம் கடந்தை திருமுறை கழகத்தின் 52 -வது ஆண்டுவிழாவையொட்டி மகா சிவபுராண சொற்பொழிவு நடைபெற்றது.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பழமலைநாதர் ஆலயத்தில் கடந்தை திருமுறை கழகத்தின் 52வது ஆண்டு விழா நடைபெற்றது. இதனையொட்டி 28 ஆகம லிங்க சன்னதியில் திருக்கைலாய பரம்பரை தருமை ஆதீனம் இருபத்தி ஏழாவது குருமகாசந்நிதானம் ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் அருள் ஆசியுடன் திருமுறை கழகத்தின் சார்பாக திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை நான்கு நாட்களுக்கு மகா சிவபுராணம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.
ஈசான நமச்சிவாய மூர்த்தி மற்றும் கண்டமங்களம் சிவகுரு சாது சிவனடியார்கள் தலைமையில் சொற்பொழிவு நடைபெற்றது.
இதில் திருக்கோயில் அலுவலர்கள் மற்றும் அர்ச்சகர்கள், வண்ணாங்குடிகாடு ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன்பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்.