விருத்தாசலம் அருகே இருசக்கர வாகனம் மீது பள்ளி வாகனம் மோதி விபத்து

விருத்தாசலம் அருகே இருசக்கர வாகனம் மீது பள்ளி வாகனம் மோதிய விபத்தில் மாணவர்கள் 20 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Update: 2021-12-22 15:02 GMT

விருத்தாசலம் அருகே தனியார் பள்ளி வாகனம் விபத்துக்குள்ளானது.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கோபாலபுரத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனம் 20 மாணவர்களுடன் விருத்தாசலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. குமாரமங்கலம் கிராம பேருந்து நிறுத்த வளைவில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சாலையை கடக்க முற்பட்டபோது இருசக்கர வாகனம் மீது பள்ளி வாகனம் மோதியதில் பள்ளி வாகனம் சாலையோர பள்ளத்தில் இறங்கியது.

இதில் பள்ளி மாணவர்கள் 20 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இருசக்கர வாகனத்தில் வந்த குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல், கோபு இருவருக்கும் காயம் ஏற்பட்டு விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவ் விபத்து குறித்து கம்மாபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News