விருத்தாசலத்தில் மத்திய அரசுக்கு எதிராக சாலை மறியல் போராட்டம்
விருத்தாசலத்தில் மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.
3 வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சார ஒழுங்குமுறை சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்,நாட்டின் பொதுச் சொத்துக்களை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க கூடாது,பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்ப பெறவேண்டும்,44 தொழிலாளர் சட்டங்களை நான்கு தொகுப்புகளாக மாற்றியதை ரத்து செய்ய வேண்டும்,டெல்லியில் 10 மாதங்களாக போராடும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்தும்,கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
இதில் தி.மு.க,காங்கிரஸ்,இந்திய கம்யூனிஸ்ட்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,விடுதலை சிறுத்தை கட்சி,தமிழக வாழ்வுரிமைக் கட்சி,ம.தி.மு.க.,பெரியார் திராவிட கட்சி,மக்கள் அதிகாரம் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.முன்னதாக விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஜங்ஷன் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் செய்தனர்,இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.