விருத்தாச்சலம் கோட்டாட்சியரிடம் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மனு அளித்தார்
Virudhachalam MLA-பா.ஜ.க. அரசை கண்டித்து விருத்தாச்சலம் கோட்டாட்சியரிடம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் மனு கொடுத்தார்.
Virudhachalam MLA-பஞ்சாப் மாநிலத்தில் ஆளுகின்ற காங்கிரஸ் ஆட்சியை கலைத்துவிட்டு குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டு வருவதற்கு பா.ஜ.க. சதித்திட்டம் திட்டுவதாக கூறி ஒன்றிய அரசை கண்டித்து விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.ஆர் ராதாகிருஷ்ணன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கோட்டாட்சியர் ராம்குமாரிடம் மனு அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் விருத்தாசலம் காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் ரஞ்சித்குமார்,வர்த்தக அணி மாவட்ட தலைவர் சுபம் மணிகண்டன்,மாவட்ட துணைத்தலைவர் ஆணிமுத்து,மாவட்ட செயலாளர் இருதயசாமி,மாவட்ட பொது செயலாளர் இளங்கோமணி,ராஜா,மாநில பிசிசி சகாயமேரி,மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜூலி மேத்தா மற்றும் அக்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2