விருத்தாசலத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்

விருத்தாசலத்தில் அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

Update: 2022-01-30 07:06 GMT

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரம் 33வது வார்டு சித்தலூர் பகுதியில் உள்ள 7வது தெருவில் கடந்த 6 வருட காலமாக தெருவிளக்குகள் எரியாமல் இரவு நேரங்களில் இருளில் மூழ்கி உள்ளது. தெருவுக்குள் செல்லும் பாலம் உடைந்துள்ளதால் அவசரகாலத்தில்  எந்த வாகனமும் உள்ளே செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.

தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை சரி செய்யக்கோரி பலமுறை நகராட்சியில் மனு கொடுத்தும் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் காரணத்தால் நகராட்சி தேர்தலை புறக்கணிப்போம் எனக் கூறி அப்பகுதி பொதுமக்கள் விருத்தாசலம் ஜெயங்கொண்டம் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதோடு முழக்கங்களிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தகவல் அறிந்த விருத்தாசலம் காவல்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் இதுகுறித்து சாலை மறியல் செய்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.  விரைவில் சரி செய்து தருவதாக அதிகாரிகள் கூறியதின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.  இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது...

Tags:    

Similar News