கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

விருதாச்சலம் அருகே முறையான கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்.;

Update: 2021-12-18 05:34 GMT

விருதாச்சலம் அருகே முறையான கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 

விருதாச்சலம் அருகே முறையான கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம். தமிழ்நாடு அரசு கொசு வளர்ப்பு திட்டம் கருவேப்பிலங்குறிச்சி என்று துண்டுப் பிரசுரம் ஒட்டியிருந்ததால் பரபரப்பு.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி ஊராட்சி பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், சாலை விரிவாக்க பணிக்காக சாலையின் இருபுறங்களிலும் நெடுஞ்சாலை துறையினர் பணி மேற்கொண்டனர்.

அப்போது சாலையின் இருபுறங்களிலும் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியே செல்ல முடியாமல் ஆங்காங்கே தேங்கி நிற்பதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் ஏற்படும் அபாய நிலை நிலவி வருவதால் பலமுறை அரசு அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் முறையான கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தரக்கோரி விருத்தாசலத்திலிருந்து ஜெயங்கொண்டம் செல்லும் கருவேப்பிலங்குறிச்சி நான்கு முனை சந்திப்பு சாலையில் பெண்கள் தமிழ்நாடு அரசு வளர்ப்பு கொசு வளர்ப்புத் திட்டம் என கையில் பதாகை ஏந்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

பின்பு, அங்கு வந்த கருவேப்பிலங்குறிச்சி உதவி ஆய்வாளர் பாக்கியராஜ் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதின் பெயரில் போராட்டக்காரர்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும்,அப்பகுதியில் உள்ள நான்கைந்து கடைக்காரர்கள் தமிழ்நாடு அரசு வளர்ப்பு கொசு வளர்ப்புத் திட்டம் கருவேப்பிலங்குறிச்சி என்று கடை முன்பு துண்டு பிரசுரங்களும் ஒட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News