வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதார் கார்டு எடுக்க குவிந்த பொதுமக்கள்
வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதார் சேவை மையத்தில் நூற்றுக்கும் அதிகமான மக்கள் குவிந்ததால் தொற்று பரவும் அபாயம்;
ஆதார் மையத்தில் சமூக இடைவெளியின்றி குவிந்த மக்கள்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதார் சேவை மையம் இயங்குகிறது. இங்கு நாளொன்றுக்கு 15 முதல் 20 நபர்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படுகிறது.
கடந்த மூன்று நாட்கள் விடுமுறை நாள் என்பதால், இன்று ஆதார் சேவை மையத்தில் பொதுமக்கள் முக கவசம் அணியாமலும்,சமூக இடைவெளி கடைபிடிக்காமலும்,அதிக அளவில் கூடினர். இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது.
மேலும் ஆதார் மையத்தில் பனிபுரியும் ஊழியர்கள் அதனை கண்டுகொள்ளாமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.