விருத்தாசலம் அருகே ஆபத்தை உணராமல் பேருந்தின் மேல் பயணம் செய்யும் மாணவர்கள்
விருத்தாசலம் அருகே ஆபத்தை உணராமல் பேருந்தின் மேல் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள். கூடுதல் பேருந்து இயக்க பொதுமக்கள் கோரிக்கை;
கடலூர் விருத்தாசலம் மார்க்கத்தில் கருவேப்பிலங்குறிச்சி, டிவி புத்தூர், வேட்டக்குடி, வண்ணான்குடிகாடு, ஓலையூர், அழகாபுரம், இடையக்குறிச்சி, ஆண்டிமடம் வரை தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், கொத்தனார் வேலை செய்பவர்கள், பள்ளி மாணவ மாணவிகள்,அரசு ஊழியர்கள் என தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயணம் செய்கின்றனர்..
இந்நிலையில் அப்பகுதியில் ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்படுவதால், பேருந்தில் இடம் இல்லாததால் ஆபத்தை உணராமல் பேருந்தின் மேலே பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களால் அவ்வப்பொழுது விபத்துகளும்,உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.
எனவே, இது போன்ற விபத்துகளை தவிர்க்க கூடுதல் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்...