பிரியங்கா காந்தி கைது கண்டித்து விருத்தாசலத்தில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
Congressmen protest in Vriddhachalam condemning the arrest of Priyanka Gandhi;
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்ட ன ஆர்ப்பாட்டம் நடந்தது. உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை கண்டித்து அதை திரும்ப பெற வலியுறுத்தி போராடிய விவசாயிகள் மீது மத்திய அமைச்சர் மற்றும் அவரது மகன் கார் ஏற்றி 8 விவசாயிகளை படுகொலை செய்ததை கண்டித்தும், சம்பவ இடத்திற்கு பார்வையிடச் சென்ற பிரியங்கா காந்தியை கைது செய்ததை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் எம். ஆர். ஆர். ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.மாவட்ட பொருளாளர் ராஜன்,நகர தலைவர் ரஞ்சித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட பொது செயலாளர் கதிர்வேல்,முன்னாள் மாவட்ட தலைவர் நகர்பெரியசாமி,மாவட்ட வர்த்தக அணி பிரிவு தலைவர் சுபம்மணிகண்டன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
அலுவலக செயலாளர் இருதயசாமி,முன்னாள் மாவட்ட பொது செயலாளர் தங்கதுரை,மாவட்ட மகளிரணி தலைவி ஹேமலதா மற்றும் அணிமுத்துபாய்,மாவட்ட பொது செயலாளர் ராகவன் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.