விருத்தாசலத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் நோய்த்தடுப்பு ஆலோசனை கூட்டம்
கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் நோய்தொற்று பரவலை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் கோட்டாட்சியர் ராம்குமார் தலைமையில் நடைபெற்றது. இவ்வாலோசனைக் கூட்டத்தில் பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்த்தல்,பொதுமக்களுக்கு விளம்பரம் மற்றும் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், முக கவசம் அணிய வலியுறுத்துவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, தடுப்பூசி போட வலியுறுத்துவது, கொரோனா கவனிப்பு மையம் அமைப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அரசின் ஊரடங்கு விதிமுறைகள் மேற்கொள்வது குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
இதில், விருத்தாசலம், திட்டக்குடி,வேப்பூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வருவாய்த் துறை ,சுகாதாரத்துறை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்கள் பங்கேற்றனர்.