விருத்தாசலம் கடைவீதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கடைகள் அகற்றம்

விருத்தாசலம் கடைவீதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கடைகளை அகற்றும் பணி பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்

Update: 2021-09-13 08:01 GMT

விருதாசலத்தில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். ஆனால் கடைக்காரர்கள் சாலையை ஆக்கிரமிப்பதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.

விழாக்காலங்களில் கடைவீதி ஜங்ஷன் சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கூட்டம் அதிக அளவில் கூடுவதால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் விருத்தாசலம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் முருகன், காவல் உதவி ஆய்வாளர் ஆதி உள்ளிட்ட காவலர்கள் சாலையோரம் இடையூறாக உள்ள கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News