விருத்தாசலத்தில் பொது இடங்களில் மது அருந்த போலீசார் தடை
விருத்தாசலத்தில் பொது இடங்களில் மது அருந்த தடை இருப்பதாக போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர்.
தமிழக அரசு மது பிரியர்கள் பொது இடங்களில் மது அருந்த கூடாது என உத்தரவிட்டு உள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் அறிவுறுத்தலின் பேரில் விருத்தாசலம் காவல்துறை சார்பில் ஒலிபெருக்கி மூலம் பொது இடங்களில் மது அருந்தக் கூடாது மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
இதில் விருத்தாசலம் காவல் ஆய்வாளர் விஜயரங்கன்,உதவி ஆய்வாளர்கள் ஆதி, சரவணன் கிருஷ்ணராஜ் ,உளவு பிரிவு பாலமுருகன், மற்றும் இளங்கோவன்,ஜெயபால்,பெண் காவலர்கள் மணிமேகலை, வெண்ணிலா வைதேகி பங்கேற்றனர்.