விருத்தாசலம்: வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம் கோரி ஆர்ப்பாட்டம்
விருத்தாசலத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரை பணியிடை நீக்கம் செய்ய கோரி ஊராட்சி மன்ற தலைவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம். நடத்தினர்.;
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஊராட்சி தலைவர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணிகளில் லஞ்சம் பெற்றுக் கொண்டு குறிப்பிட்ட ஊராட்சிகளுக்கு மட்டும் பணி ஆணை வழங்குவது,லஞ்சமும் ஊழலும் முறைகேடுகளும் நடக்கின்ற வட்டார வளர்ச்சி அலுவலக நிர்வாகத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோருவது,வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமாரியை பணியிடை மாற்றம் மற்றும் பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்,
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கவிசலூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார்.இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ராஜேந்திர பட்டினம்,கோ.பவழங்குடி,கோ.மாவிடந்தல்,சாத்துக்குடல் கீழ்பாதி, சாத்துக்குடல் மேல்பாதி,ஆலடி,சின்ன கண்டியங்குப்பம், வேட்டக்குடி, கோமங்கலம்,விளாங்காட்டூர்,ஆலிச்சிக்குடி,டி.வி.புத்தூர்,கொடுக்கூர்,கருவேப்பிலங்குறிச்சி,சின்னபருர்,பரவலூர்,கச்சிராயநத்தம் ஊராட்சிமன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.