விருத்தாசலத்தில் அண்ணா சிலைக்கு அமைச்சர் கணேசன் மாலை அணிவித்து மரியாதை

விருத்தாசலத்தில் அண்ணா பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் கணேசன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

Update: 2021-09-15 05:04 GMT

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில்  தி.மு.க. சார்பில் அண்ணாவின்  பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி  ஸ்டேட் பாங்க் அருகில் உள்ள  அண்ணா சிலைக்கு தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி. வெ. கணேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் ..

பின்னர் அங்கு கூடி இருந்தவர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் தண்டபாணி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் அருள்குமார், நகர இளைஞரணி அமைப்பாளர் பொன் கணேஷ், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ரவிச்சந்திரன்,ஆசிரியர் பக்கிரிசாமி, நகர துணை செயலாளர் நம்பிராஜன், மாவட்ட பிரதிநிதி ஆட்டோ பாண்டியன், நகர தி.மு.க. வானவில் அன்சர்அலி, நகர மாணவரணி கார்த்திக், நகர இளைஞரணி மார்க்கெட் பிரபு, முன்னாள் கவுன்சிலர் கர்ணன், 11 வது வட்ட செயலாளர் கணேசன், இளைஞரணி துணைச் செயலாளர் குமார், தளபதி, நகர இளைஞர் அணி உதயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News