நெய்வேலியில் புதிய காவல் நிலையத்தை அமைச்சர் சி.வெ.கணேசன் திறப்பு
புதியதாக கட்டப்பட்ட காவல் நிலையத்தை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் திறந்துவைத்தார்.
கடலூர் மாவட்டம், நெய்வேலி பகுதிக்குட்பட்ட தெர்மல் காவல் நிலையத்தை காப்பான்குளம் பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு சிவெ. கணேசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேஷ், விருதாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.ஆர்.ராதாகிருஷ்ணன், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன் மற்றும் ஏராளமான காவல்துறையினர் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.