பள்ளி குழந்தைகளை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற அமைச்சர் சிவெ கணேசன்
விருத்தாசலத்தில் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு பூங்கொத்து மற்றும் இனிப்பு கொடுத்து அமைச்சர் கணேசன் வரவேற்றார்;
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் நகராட்சிக்குட்பட்ட பூதாமூர் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நீண்ட மாதங்களுக்குப் பிறகு பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு பூங்கொத்து கொடுத்து இனிப்பு வழங்கி,தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவெ கணேசன் பள்ளி குழந்தைகளை வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார், வருவாய் வட்டாட்சியர் சிவக்குமார், மாவட்ட கல்வி அலுவலர், பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.