பூட்டி கிடக்கும் இலவச பெண்கள் கழிப்பறை: பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் பல மாதங்களாக பூட்டி கிடக்கும் இலவச பெண்கள் கழிப்பறை பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை.

Update: 2021-09-30 04:31 GMT

பூட்டி கிடக்கும் இலவச பெண்கள் கழிவறை.  

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் தினசரி பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கிறார். இந்நிலையில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் பெண்களுக்கு இலவசமாக கழிப்பறை வசதி கட்டப்பட்டது. தற்போது பயன்பாட்டில் இல்லாத நிலையில், பெண் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் நகராட்சி நிர்வாகம் பெண்கள் இலவச கழிவறையை திறந்து, சுத்தம் செய்து பெண் பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News