நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக விருத்தாசலம் கோட்டாட்சியரிடம் வி.சி.க.மனு
பூமிதான இயக்கம் மூலம் வழங்கப்பட்ட நிலத்தை மீட்டுத்தரக்கோரி விருத்தாசலம் கோட்டாட்சியரிடம் வி.சி.க. புகார் கொடுத்தது.;
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட மணலூர் எல்லையில் தமிழக அரசால் பூமிதான இயக்கம் மூலம் 1964 ஆம் ஆண்டு ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்த 9 நபர்களுக்கு நிலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த 1 ஏக்கர் 11சென்ட் நிலத்தை மாற்று சமூகத்தார் கையகப்படுத்தி ஆக்கிரமித்து வைத்துள்ளதாகவும் அந்நிலத்தை மீட்டுத் தரக்கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பாதிக்கப்பட்ட நில பயனாளிகள் விருத்தாசலம் கோட்டாட்சியர் ராம்குமாரிடம் மனு அளித்தனர்.