கம்மாபுரம் ஒன்றிய தலைவர், துணை தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்
விருத்தாசலம் அருகே உள்ள கம்மாபுரம் ஒன்றிய தலைவர், துணை தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.;
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 20 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளனர்.கடந்த அ.தி.மு.க ஆட்சியின் போது அனைத்து ஒன்றிய குழு உறுப்பினர்களின் ஆதரவுடன் அ.தி.மு.க. வைச் சேர்ந்த மேனகா விஜயகுமார் ஒன்றிய குழு தலைவராகவும், ஒன்றிய துணை தலைவராக முனுசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஒன்றிய பெருந்தலைவர் மற்றும் ஒன்றிய துணை தலைவர் உள்ளிட்ட இருவரும் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு அரசு நிதிகளைப் பிரித்துக் கொடுக்காமல் தன்னிச்சையாக செயல்படுதாக கூறி இருவர் மீதும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக் கோரி தி.மு.க,பா.ம.க, அ.ம.மு.க,அ.தி.மு.க, தேமுதிக,சுயேட்சை உள்ளிட்ட 15 ஒன்றிய கவுன்சிலர்கள் விருத்தாசலம் கோட்டாட்சியர் ராம் குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.