விருத்தாசலம்: முதனை கிராமத்தில் ஜெய்பீம் படத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஜெய்பீம் படத்தை கண்டித்து விருத்தாசலம் முதனை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2021-11-23 11:57 GMT

விருத்தாசலம் அருகே முதனை கிராமத்தில் ஜெய்பீம் படத்தை கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை  அடுத்துள்ளது முதனை கிராமம்.முதனை ஊராட்சி மற்றும் கிராம மக்கள் சார்பில் இன்று  கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சமீபத்தில் சூர்யா நடித்து வெளிவந்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தில் முதனை கிராமத்தை தவறாக சித்தரித்தும், ஜாதி மோதலை தூண்டும் காட்சிகளையும்,குறவர் ராஜாகண்ணுவின் மீது திருட்டு பழி சுமத்தும் காட்சிகளையும் நீக்கக் கோரியும்,பொதுவெளியில் படக்குழுவினர்கள் மன்னிப்பு கேட்க கோரியும்  கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News