இருளக்குறிச்சி ஆதிதிராவிடமக்களுக்கு இலவச மனைப்பட்டா கேட்டு குடியேறும் போராட்டம்
மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் இருளக்குறிச்சி ஆதிதிராவிட மக்களுக்கு இலவச மனை பட்டா கேட்டு குடியேறும் போராட்டம்;
விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் இருளக்குறிச்சி கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு இலவச மனை பட்டா கேட்டு பாய் தலையணையுடன் முற்றுகையிட்டு குடியேறும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த இருளக்குறிச்சி கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு ஜந்து ஆண்டுகளாக இலவச வீட்டு மனை பட்டா கேட்டு வட்டாட்சியர் அவர்களிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து கிராம மக்களும் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் பாய் தலையணையுடன் பொதுமக்கள் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தை குடியேறும் போராட்டம் நடத்தினர். தகவலறிந்த வட்டாட்சியர் தனபதி போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.