விருத்தாசலம் அருகே துண்டிக்கப்பட்ட தரைப்பாலத்தை சீரமைக்க கோரிக்கை
விருத்தாசலம் அருகே துண்டிக்கப்பட்ட தரைப்பாலத்தை சீரமைத்து தர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஆவிச்சிக்குடி க.இளமங்களம் கிராமத்தில் உள்ள சுமார் 350 ஏக்கர் பரப்பளவில் அப்பகுதி மக்கள் விவசாயிகள் விவசாயம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் மழையால் விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதையில் நீண்ட ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தரைப்பாலம் தற்போது பெய்த மழையில் முற்றிலும் துண்டித்த நிலையில், இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம், ஊராட்சி நிர்வாகம்,உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துயுள்ளனர்.