விருத்தாசலத்தில் கிராம உதவியாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம்
விருத்தாசலத்தில் தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில்உள்ள தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் மாவட்ட தலைவர் பதவி காலியாக உள்ளதால் புதிய மாவட்ட தலைவர் தேர்வு செய்தல்,கிராம உதவியாளர் டி கிரேடுவிற்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் அரசு வழங்க வேண்டும்,2003 க்கு பின் பணியில் சேர்ந்து பணிபுரியும் கிராம உதவியாளர்கள் சி.பி.எஸ். பணம் பிடிப்பதை நிறுத்தி வைத்திருப்பது,கிராம உதவியாளர் பணிக்கு கல்வித்தகுதி அடிப்படையில் 10 ஆண்டுகள் பணி முடிந்தவர்களுக்கு பணி உயர்வு வழங்குதல், ஆறு ஆண்டுகள் பணி செய்தால் போதும் என்ற அரசாணையை தளர்த்தி வழங்க வேண்டும்,வருவாய் நிர்வாகத்தில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள் என்ன பணிகள் செய்ய வேண்டும் என்ற புதிய பணி விதிகளை அரசு உருவாக்கி அரசாணையாக வெளியிட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் மாநில சங்க நிர்வாகிகள்கண்ணன்,வேல்முருகன்,ஆறுமுகம்,மணிமாறன்,வேல்சாமி,சண்முகம்,சுரேஷ்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர் கார்மேகம் வரவேற்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியர் சிவகுமார் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். மாநில சங்க ஆலோசகர் பெருமாள்,மாநில துணைத்தலைவர் மாரி,மாநில அமைப்பு செயலாளர் முருகேசன் மற்றும் காசிநாதன்,மலர்கொடி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.மாவட்ட துணைத்தலைவர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.
இக்கூட்டத்தில்திருவாரூர்,பெரம்பலூர்,சிவகங்கை,மதுரை,திருநெல்வேலி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலிருந்தும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.