விருத்தாசலம்:ராஜேந்திர பட்டினத்தில் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி

விருத்தாசலம் அருகே உள்ள இராசேந்திரப்பட்டினம் ஊராட்சியில் மழைநீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்றது.;

Update: 2021-09-22 06:32 GMT

விருத்தாசலம் அருகே ராஜேந்திர பட்டினம் ஊராட்சியில் மழை நீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி நடந்தது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ராசேந்திரப்பட்டினம் ஊராட்சியில் மழைக்காலங்களில் சேதங்களை தவிர்க்கும் வகையில்,சாலை சீரமைக்கும் பணி,மரம் கழித்தல் பணி,ஏரி தூர்வாரும் பணி,மற்றும் மழைநீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது.

கிராம ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்று வரும் இப்பணியில் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள், அரசு ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

Tags:    

Similar News