பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
விருத்தாச்சலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஸ்டேட் பேங்க் அருகில் மக்கள் அதிகாரம் சார்பில், மத்திய அரசின் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் மணிவாசகம் தலைமை தாங்கினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிலிண்டருக்கு நாமமிட்டு, மாலை போட்டு, விரகு, அடுப்பு பாத்திரம் வைத்து சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு காரணமான (மத்திய) ஒன்றிய அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர். மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பி சிறப்புரையாற்றினார்.