விருத்தாசலத்தில் தாசில்தார்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டடம்
விருத்தாசலத்தில் தாசில்தார்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத வேப்பூர் வட்டாட்சியர் மற்றும் திட்டக்குடி வட்டாட்சியர்களை கண்டித்து புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் தர்ணா போராட்டம் நடை பெற்றது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் கோகுலகிருஷ்டீபன் தலைமை தாங்கினார்.
இந்த தர்ணா போராட்டத்தில் வேப்பூர் வட்டாட்சியர் மீதும் திட்டக்குடி வட்டாட்சியர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டி கோஷங்கள் எழுப்பினர், இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.