கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே அபாய நிலையில் பாலம்

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பாலம் அபாய நிலையில் இருப்பதால் புதிய பாலம் அமைக்க கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.;

Update: 2021-09-30 16:57 GMT

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள பாலம்

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் வட்டம், வலசக்காடு கிராமத்திலிருந்து பாளையங்கோட்டை செல்லும் வழியில் முக்குட்டி கரை பகுதியில் ஒரு பாலம் உள்ளது.

பாளையங்கோட்டையில் உள்ள பள்ளியில் வலசக்காடு, பேரூர் மதுரா மேட்டுக்குப்பம் சுற்றியுள்ள மாணவ மாணவிகள் ஏராளமானோர் பயின்று வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் சுற்றியுள்ள கிராமத்தினர், விவசாயிகள் அனைவரும் இந்தப் பாதையை தினந்தோறும் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் இந்த பாலம் கனமழை பெய்த காரணத்தினால் மண் அரித்து பாலத்தின் ஒரு பகுதி எந்தவித பிடிப்பும் இல்லாமல் அந்தரத்தில் தொங்குகின்றது.  இந்தப் பாலம் இடிந்து  விழும் அபாய நிலையில் உள்ளது.

இந்தப் பாலம் உடைந்தால் இப்பகுதி மக்கள், மாணவ/ மாணவிகள் அனைவரும் பண்ணை வேலி வழியாக சோழதரம் மெயின் ரோடு சென்று பாளையங்கோட்டை செல்லவேண்டிய நிலை ஏற்படும். இதனால் கூடுதலாக ஆறு கிலோமீட்டர் தூரம் பயணம் செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தற்காலிக பாதை அமைத்து தர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News